ஓய்வை அறிவிக்கப் போகும் ஜடேஜா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவிக்கலாம் என யோசித்து வருவதாக ஜடேஜாவின் நண்பர்கள் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். 

இன்னும் சில நாட்களில் தென்னாப்பிரிக்காவிற்கு செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துவிட்டு வெள்ளை பந்து போட்டிகளில் தனது கவனத்தை செலுத்தலாம் என்ற யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல ஊடகத்திற்கு இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உடன் விளையாடும் வீரர், ஜடேஜா உடற்தகுதி கவனத்தில் கொண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, வெள்ளை பந்து தொடர்களை தனது கவனத்தை செலுத்தலாம் என யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jadeja may be retirement for test match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->