3 வருடங்களுக்குப் பின் சேப்பாக்கத்தில் ஐபிஎல்.! CSK ரசிகர்களின் வெறித்தனமான வைப் மோட்.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா வருகின்ற மார்ச் 31ம் தேதி முதல் துவங்கயிருக்கிறது. மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த கிரிக்கெட் போட்டி தொடர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்க இருக்கிறது.

இதற்காக சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம் முழு வீச்சில் தயாராகிவிட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  லக்னோ அணியும் மோத உள்ளன.

இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு  தூங்கியது. இதற்காக அதிகாலை முதலே  கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்க காத்திருந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 3 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியும் மூன்று வருடங்களுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி இருக்கிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனியின் ஆட்டத்தை காண  ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கினர். மேலும் டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாகவும் நடைபெறுகிறது. டிக்கெட்டுகளின் விலை 1500 முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl ticket sale for the match between csk and lsg begis today people wait from early morning for tickets


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->