உள்ளே.. வெளியே.. யார்.. யார்..? முடிந்தது லீக் ஆட்டம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க அட்டகாரகளாக களமிறங்கிய கிறிஸ் லின், ஷுப்மான் கில் முதல் இரண்டு ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை இந்தியன்ஸ்ன் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கொல்கத்தா அணி தடுமாறியது.

முதல் பவர்பிளேயில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்து. இதில் கிறிஸ் லின் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா கடைசி வரை நின்று போராடி 40 ரன்கள் அடித்தார். கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே எடுத்து, மும்பை அணிக்கு எளிய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் ஜோடி, வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நிதானமாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குவிண்டன் டி காக் 30 ரன்கள் (3 சிக்சர்கள், ஒரு 4 ஓட்டம்) 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து தங்களது அதிரடி ஆட்டத்தால் மும்பை அணியை வெற்றி பெற வைத்தனர். 16.1 ஓவர்களில் வெற்றி இலக்கான 134 ரன்களை எடுத்து கொல்கத்தா அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டது.

புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ள சிஎஸ்கே, பஞ்சாப், மும்பை, ஹைதராபாத் அணிகள், குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

English Summary

ipl leek round over


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal