#BREAKING : ஷோ காட்டிய 'ஷா'வின் சோலியை முடித்த ஜ.,ஜா.! ர்ர்.,ர்ர்., கர்ஜிக்கும் சென்னை சிங்கங்கள்.! - Seithipunal
Seithipunal


14-வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இன்று தொடங்கி உள்ளது. இதில், புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் என்பதால் இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலி பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. 

அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்வி ஷா, சென்னை அணிக்கு சிறப்பான ஒரு படத்தை காட்டி கொண்டு இருக்கிறார். முதல் ஓவரில் திணறுவது போல் திணறிய டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், இரண்டாவது ஓவரில் தங்களது அதிரடியை காண்பித்தனர்.

அதுவும் பிரித்வி ஷா இரண்டாவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். 3வது ஓவரை தீபக் சாகர் வீச அவரின் பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்து பிரித்வி ஷா கதறவிட்டார். நான்காவது ஒருவரை ஹசில்வுட் வீச, முதல் பந்தில் ஷிகர் தவான் 4 ரன்களை அடித்து அசத்தினார். இரண்டாவது பந்தில் தூக்கி அடிக்க முற்பட்டபோது அது கேட்ச் ஆக மாறி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஷிகர் தவானின் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஆரம்பம் முதலே தடுமாறினார். முதல் 4 பந்துகளில் ரன் அடிக்கலாமா? வேண்டாமா என்று தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர் தட்டுத்தடுமாறி ஒரு ரன் சேர்க்க., அடுத்து வந்த மூன்று பந்துகளில் சந்தித்து ரன் எடுக்காமல்  தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதேசமயத்தில், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்கு படம் கட்டி கொண்டு இருந்தார். அரை சதம் கடந்து, (7 பவுண்டரி 3 சிக்சர்களுடன்) 60 ரன்கள் எடுத்து இருந்த போது, ஜடேஜா (ஜ.,ஜா) வீசிய பந்து வீச்சில் ஷாவின் சோலி முடிந்தது.

தற்போது வரை டெல்லி கேப்பிடல் அணி  ஓவர்கள் 13 முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு, 96 ரன்களை குவித்துள்ளது. களத்தில் ரிஷப் பண்ட் 9 ரன்னுடனும், ஹெட்மேயர் 5 ரன்னுடம் ஆடி வருகின்றனர். சென்னை அணி பந்துவீச்சை பொருத்த வரை ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா, மெயின் அலி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL CSK VS DC SHAW WICKET


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->