சென்னையில் மீண்டும் ஐபிஎல் போட்டி! - Seithipunal
Seithipunal


அணியின் சொந்த மைதானங்களிலும் இனி ஐபிஎல் போட்டி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி அறிவிப்பு!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன் 2023 ஆம் ஆண்டு சீசன் போட்டிகள் அணியின் சொந்த மைதானம் மற்றும் வெளி மாநில மைதானங்களில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு தொடரானது முதல் பாதி இந்தியாவிலும் பிற்பாதி ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியானது அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு சொந்தமான மைதானம் மற்றும் வெளிமாநில மைதானங்களில் விளையாடும் என்பதை கங்குலி உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக ஐபிஎல் அணிகள் தொடர்புடைய மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தங்களது ஆட்டங்களை விளையாட உள்ளது. 

மேலும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்தப்படும் எனவும், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி முதல் பெங்களூர்,ராஜ்கோட், இந்தூர், புனே ஆகிய இடங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL again in Chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->