#IPL2023 : ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா CSK.? கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

இந்த சீசனில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 7  போட்டிகளில் வெற்றி ஒரு போட்டியில் முடிவில்லை என 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேபோல், இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன.

இன்றைய தினம் நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும். இதில், கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வெற்றி பெற்றால் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், ஒருவேளை தோல்வி அடைந்தால் வரும் மே 20ம் தேதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர் 

இவ்விரு அணிகளும் இதுவரை  28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 18 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 9 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 61th match CSK vs KKR


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->