#IPL2023 : பெங்களூர் - குஜராத் போட்டி மழையால் தடைபட வாய்ப்பு.. RCB-க்கு ஆப்பு வைக்கும் மழை.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல், டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

கடைசி 2 லீக் போட்டிகள்

இந்த நிலையில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடை மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன

அதனைத் தொடர்ந்து இன்று இரவு 7.30 நடைபெறும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் பெங்களூர் - குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த இரண்டு போட்டிகளில் முடிவை பொருத்து தான் 4வது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்பது தெரியவரும்.

மழை குறுக்கீடு

இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் கனமழை பெய்து வருவதால் பெங்களூர் குஜராத் போட்டி மழையால் தடைப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரவு 8.30 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ப்ளேஆப் வாய்ப்பு யாருக்கு.?

ஒருவேளை மழை காரணமாக பெங்களூர் குஜராத் போட்டி கைவிடப்பட்டால் பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை மும்பை அணி தோல்வி அடைந்தால் மட்டுமே பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றாலும் அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அல்லது குறைந்த ஓவர்களில் இலக்கை எட்டி அதிக நெட் ரன்ரேட் பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

மேலும் இந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளும் தோல்வி அடைந்தாலும் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், மும்பை மற்றும் பெங்களூர் அணி மோசமான தோல்வி அடைந்தால் நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 RCB vs GT match heavy rain in Bangalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->