#IPL2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி.. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல்.! - Seithipunal
Seithipunal


16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

அந்த வகையில் டெல்லி அணி முதல் அணியாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் சென்னை அணியில் சிறப்பாக விளையாடிய ஷிவம் தூபே 48 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ரின்கு சிங்-நிதீஷ் ரானா ஜோடி சிறப்பாக விளையாடி கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி தந்தது.

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி லீக் போட்டி வரும் மே 20ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 61th match KKR won by 6 wickets against CSK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->