#IPL2023 : முதலிடத்திற்கு முன்னேறுமா CSK.? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 4 போட்டியில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதேபோல், கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 33வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தொடக்கத்தில் பந்துவீச்சு சொதப்பிய நிலையில் தற்போது சிறப்பாக செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே, பதிரனா, தீக்ஷனா ஆகியோர் சிறப்பாக பந்து வீசுகின்றனர். பேட்டிங் பொறுத்தவரை சென்னை அணி மிகவும் பலமாக உள்ளது.

தொடக்கத்தில் வெற்றியுடன் தொடங்கிய கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. பல அதிரடி ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ள கொல்கத்தா அணி இன்றைய தினம் சிறப்பாக விளையாடினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடுமையான சவாலாக இருக்கும்.

அந்த வகையில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க கொல்கத்தா அணியும், முதலிடத்தை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இவ்விரு அணிகளும் 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 9 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 33rd Match CSK vs KKR


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->