வெறித்தனம் காண்பித்த சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்.. பாராட்டிய தோனி..! - Seithipunal
Seithipunal


சென்னை அணியில் சிறப்பை வெளிக்காட்டும் பொருட்டு, தனது வீட்டினை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய தமிழக ரசிகரை தோனி பாராட்டியுள்ளார். 

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், " ஒரு வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றுவது என்பது சாதாரண காரியமல்ல. ரசிகர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் இணைந்து எடுத்துள்ள இந்த செயலுக்கு நான் பாராட்டுகிறேன். 

மேலும், ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு, பின்னர் மாற்றுவதைப்போல இதனை செய்ய முடியாது " என்று தோனி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கோபி கிருஷ்ணன் தோனியின் பெரும் ரசிகராக இருந்தவர். 

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும் முன்பு தனது வீட்டின் வெளிப்புறத்தில் தோனியின் புகைப்படத்தை சுவரொட்டியாக வரைந்திருந்த நிலையில், சி.எஸ்.கே அணிக்காக வீட்டினையே மஞ்சள் நிறத்தால் மாற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2021 CSK Fan Home of Dhoni Fan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->