மகளிர் உலகக் கோப்பை : இந்திய அணி வெளியேற்றம் - போராடி தோல்வியடைந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது இந்தியா பாகிஸ்தான் இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன இன்று இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா 71 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களும், ஷெபாலி வர்மா 53 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 48 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தது. 

இந்த போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் அரைசதம் அடித்ததன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீராங்கனை மற்றும் மிக அதிக வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

275 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி போராடி வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvSA CWC22


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->