ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தியது! - Seithipunal
Seithipunal


இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பான் அணியை வீழ்த்தி உள்ளது.

சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சீனாவை இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்  3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டு விளையாடி உள்ளது .

இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்த விளையாட்டில், இந்திய அணி சார்பில் சுக்ஜீத் சிங் இரண்டு கோல்களையும் அபிஷேக், சஞ்ஜய் மற்றும்  உத்தம் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்துள்ளனர் . பின்னர், ஜப்பான் அணி தரப்பில் மட்சுமோட்டோ கசுமாசா 41-வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார்.

இதனை அடுத்து நாளை இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மலேசியா அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடரில் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில், ரவுண்ட் ராபின் லீக் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எனவும், பின்னர் அரை இறுதி ஆட்டங்கள் வரும் செப் 16-ம் தேதியும், இறுதிப் போட்டி ஆட்டம் செப் 17-ம் தேதியும் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian team defeats Japan in Asian Champions Hockey Series


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->