குறைந்த விலையில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கைக்கு விமான சுற்றுலா; ஐஆர்சிடிசி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஐஆர்சிடிசி சார்பில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

சிங்கப்பூர், மலேசியா சுற்றுலா பயணம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பயணம் 08 இரவுகள், 09 பகல்கள் கொண்ட பயணம் என்று குறிப்பிட்டுள்ளது.

கோவையிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அமைந்துள்ள பெட்ரோனாஸ், பத்து குகை, கெண்டிங் உயர்நிலப் பகுதிகள், இரட்டை கோபுர சுதந்திர சதுக்கம், தேசிய நினைவுச் சின்னம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணத்திற்கான கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,50,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விமானக் கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, போக்குவரத்து, உணவு, நுழைவுக் கட்டணம், சுற்றுலா வழிகாட்டி, பயணக் காப்பீடு உள்ளிட்டவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இலங்கைக்கு வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி 05 இரவு, 06 பகல் கொண்ட சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24-ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் கொழும்பு, கண்டி, நுவரெலியா போன்ற நகரங்களில் அமைந்துள்ள ராமாயண புராணத்தின் முக்கியத்துவம் பெற்ற கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.64 ஆயிரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air tour packages to Singapore Malaysia and Sri Lanka offered by IRCTC


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->