#INDvsAUS : 2வது டெஸ்ட் போட்டி.. ஜடேஜா - அஸ்வின் அபார பந்துவீச்சு.. இந்திய அணி அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (பிப்ரவரி 17-21) காலை 9:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்களும், அஸ்வின், ஜடேஜா 3 தலா விக்கெட்களும் வீத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய அக்ஸர் படேல் 74 ரன்களும், விராட் கோலி 46 ரன்களும், அஸ்வின் 37 ரன்களும் எடுத்தனர். 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 1 ரன் முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 62 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தத.

இந்த நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 2வது இன்னிங்ஸில்  ஆஸ்திரேலியா அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won by 6 wickets against australia in 2nd test match


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->