இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி.. ஆஸ்திரேலியா அணி அதிரடி வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அதிரடி வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. 

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 71 ரன்களும் 5 , கே.எல் ராகுல் 35 பந்துகளில் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனையடுத்து 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து வென்றது. 

இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 2ஆவது டி20 போட்டி 23ஆம் தேதி நாக்பூரில் நடக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India vs Australia 1st T20 match Australia won by 4 wickets


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->