இந்திய அணியில் அதிர்ச்சி மாற்றம்! டோனி அவுட்!  - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டி முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியில் மவுண்ட் மங்குனி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியுள்ளது. 

இந்தப் போட்டியானது இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இந்த தொடரில் இறுதிப் போட்டியாகும். எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் 20 ஓவர் தொடரில் இருந்தும் அவருடைய பணிச் சுமையைக் குறைக்கும் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் இன்று நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது போட்டி நடைபெற்ற அதே மங்குனி மைதானத்திலேயே இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது.  அந்த அணியின் ஆல்ரவுண்டர் காலின் டே க்ராந்தோமே நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்டனர் அழைக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் விளையாடும் கடைசி போட்டி என்பதால் அவர் முதலில் பேட்டிங் செய்வதற்கு விரும்பிய நிலையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணியில் அதிரடி மாற்றமாக காயமடைந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் தடையில் இருந்து மீண்டு வந்துள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். 

காயமடைந்த அணியின் முன்னணி வீரர் டோனி அணியில் இருந்து இன்று விலக்கி வைக்கப்பட்டுள்ளார். விஜய்சங்கர் தனது இடத்தை பாண்டியாவின் வருகைக்காக தியாகம்  செய்துள்ளார். இரண்டாவது போட்டி நடைபெற்ற அதே மைதானம் என்பதால் பேட்டிங் சாதகமாக இருப்பதால் நியூசிலாந்து வீரர்கள் உள்ளூர் மைதானத்தில் சாதிக்க அதிக வாய்ப்புள்ளது. 

English Summary

india today play with couple of changes in their squad


கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
Seithipunal