நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி! வெளியான அதிர்ச்சியான செய்தி! சோகத்தில் கிரிக்கெட் வாரியம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த போட்டி நடைபெறும்  ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி தான் தோனியின் சொந்த ஊராகும். அவரை கவுரவப்படுத்தும் விதமாக இந்த போட்டியின் தொடக்க நாளான நாளை அவரது குடும்பத்தினருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் குழந்தை, பள்ளி கால பயிற்சியாளர்களுக்கும் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுதது இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பை ஏற்று தோனியும் அவருடைய நண்பரும் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் நாளைய போட்டியில் தொடக்கத்தின் போது கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தோனி கலந்து கொள்ளும் இந்த போட்டியில், அதுவும் தோனியின் சொந்த ஊரில் நடைபெறும் இந்த போட்டியில் இதுவரை விற்ற டிக்கெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தால் வெறும் 1500 தான் என வருத்தமாக இருக்கிறது ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம். சுமார் 39 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இதுவரை 1500 மட்டுமே விற்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இதே நிலைதான் இருந்தது. 

முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா விராட் கோலி என அனைவரும் சிறப்பாக விளையாட ஆனால் அதனை ரசிக்க யாருமே வரவில்லை என்பதுதான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய சோகமான தகவலாக இருக்கிறது.  டெஸ்ட் போட்டிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும், இரவு பகலாக நடத்தலாம் என பல்வேறு ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் எப்படியாவது மைதானத்தில் பார்வையாளர்களை வர வைத்து விட வேண்டும் என ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வினியோகித்து உள்ளது. அதன்படி சிஆர்பிஎஃப் வீரர்கள் 5000 பேருக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. அதேபோல உள்ளூர் பள்ளி, கல்லூரி, கிளப்களுக்கு 10000 டிக்கெட்டுகளை கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசித்துப் பார்ப்பதற்கு ரசிகர்கள் இருந்த நிலையில், தற்போது ரசிகர்களை இவ்வாறு இலவசமாக அழைத்து வர வேண்டிய அவல நிலைக்கு கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india south africa test series fans are not came ground to watch live


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->