அபிசேக் சர்மாவின் சிறந்த தொடக்கம்; சஞ்சு சாம்சனின் அதிரடி; நியூசிலாந்துக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ள இந்தியா..!
India sets New Zealand a target of 256 runs to win
10 வது டி 20 உலாகி கோப்பை போட்டியின் இறுதி போட்டி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இந்த தொடரில் சொதப்பி வந்த அபிஷேக் சர்மா இந்த இறுதி போட்டியில் 18 பந்தில் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 46 பந்தில் 05 பவுண்டரி, 08 சிக்சருடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 25 பந்தில் 04 பவுண்டரி, -4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஹர்டிக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், திலக் வர்மா 08 ரன்களிலும், சிவம் தூபே 26 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 255 என்ற இமாலய இலக்கு என்ற ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பாக நீசம் 03 விக்கெட்டுகளையும், ரசின் ரவீந்திரா 01 விக்கெட்டினையும் ஹென்றி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
English Summary
India sets New Zealand a target of 256 runs to win