ஆஸ்திரேலியாவின் ஆறு உலகக்கோப்பை வரலாற்றுக்கு முடிவுரை எழுதிய இந்தியா!  - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடைபெற்ற உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்  மோதியதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங் தேர்வு செய்த நிலையில், டேவிட் வார்னர் 41 ரன்களிலும் ஸ்டிவன் ஸ்மித் 46  ரன்களிலும் ஆட்டம் இழக்க அடுத்து வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் வரிசையாக வெளியேற, இறுதி நேரத்தில் மிச்சேல் ஸ்டார்க் 28 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய  ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், குல்திப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா தலா இரண்டு விக்கெட்களையும், முகமது சிராஜ், ஹார்டிக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

எளிய இலக்கு தானே இந்தியா எளிதாக வெற்றி பெறும் என நினைத்தவர்களுக்கு எல்லாம் தலையில் பேரிடியாக விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோஹித் ஷர்மா, அடுத்தடுத்து டக் அவுட் ஆக, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நான் மட்டும் விதிவிலக்கா என்ன டக் அவுட் ஆகி வெளியேறினார். 

பின்னர் கோலியுடன் ராகுல் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றனர். இந்த இணை நான்காவது விக்கெட்டுக்கு, 163 ரன்களை எடுத்த போது பிரிந்தது. மிகச்சிறப்பாக ஆடி வந்த கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பினை இழந்தார். 

பின்னர் ராகுலுடன் இணைந்த ஹர்டிக் பாண்டியா ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். ராகுல் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா 41.2 ஓவர்களில் 201 ரன்களை அடித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா அணி கடந்த 6 உலககோப்பைகளாக முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியே கண்டதில்லை. கடந்த 1999 முதல் 2019 வரை இந்த வரலாற்றை தொடர்ந்தனர். அதற்கு தற்போது இந்தியா முடிவுரை எழுதியிருக்கிறது. இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாதுக்காப்பு காரணமாக, இலங்கைக்கு விளையாட ஆஸ்திரேலியா  செல்ல மறுத்ததன் காரணமாக, அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது தோல்வியை தழுவியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India rewrite the history of Australia winning streak of WorldCup opener


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->