இந்தியா - ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி.. இந்திய அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஜிம்பாபே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 : 45 மணிக்கு தொடங்குகியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. 

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவனும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

இறுதிவரை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி 30.5 ஓவர்களில் எளிதாக இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவன் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் (ஆகஸ்ட் 20) நாளை மறுநாள் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs ZIM 1st Odi india won by 10 wickets


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal