சச்சின் சாதனை தகர்ப்பு! பிராட்மேன் சாதனை சமன்! விராட் கோலியின் சாதனை பட்டியல்! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு பின்னர் பல சாதனைகளை நிகழ்த்திவரும் விராட் கோலி, தனது 500 சர்வதேச ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500 வது ஆட்டத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இது விராட் கோலிக்கு 76 வது சதமாகும், டெஸ்டில் 29 சதமும், ஒருநாள் போட்டியில் 46 சதமும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதம் என மொத்தம் 76 சதத்தை எடுத்து உள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் டெஸ்டில் 51 சதமும், ஒருநாள் போட்டியில் 49 சதமும் என மொத்தம் 100 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இருக்கும் வீராட் கோலி,  இன்னும் 24 சதங்களை அடிக்க வேண்டும். 

34 வயதான வீராட் கோலி தனது 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்துள்ளார். விராட் கோலி இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ள டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார். 

பிராட்மேன் 52 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். விராட் கோலி இந்த சாதனையை தனது 111-வது டெஸ்டில் அடைந்துள்ளார்.

மேலும், 500 ஆட்டங்களில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளியுள்ளார் விராட் கோலி. 

சச்சின் டெண்டுல்கர் தனது 500வது போட்டியின் போது 75 சதங்கள் தான் அடித்திருந்தார், விராட் கோலி 76 சதங்களுடன் வரலாறு படைத்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையிலும் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 

முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் 13 சதங்கள் அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் வெளிநாட்டு மண்ணில் தற்போதுதான் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் செஞ்சூரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs WI Test match Virat 500 match New Records


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->