இந்தியா-இலங்கை பகல் இரவு டெஸ்ட் போட்டி.. காத்திருக்கும் சுவாரசியங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நாளை 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை பகலிரவு போட்டியாகும். இந்த போட்டியை காண 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் பகலிரவு ஆட்டம் 2015-ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இரவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை டெஸ்டில் சூரியன் மறையும் அந்தப் பொழுதில் பந்துவீச்சை எதிர்கொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அந்த சமயத்தில் கூடுதல் கவனமுடன் விளையாட வேண்டும் என பேட்ஸ்மேன்கள் கூறுகின்றனர். 

பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் இதுவரை நடைபெற்ற 18 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு கிடைத்துள்ளது. டிரா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆஸ்ட்ரேலியா தான் ஆடியுள்ள 10 பகல் இரவு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை மூன்று பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளது.

பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்திய தரப்பில் சதம் அடித்த ஒரே வீரர் விராட் கோலி தான். 2019ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக 136 ரன்கள் எடுத்து இருந்தது. இதுதான் அவர் கடைசியாக அடித்த சதம் ஆகும். ஆகையால், நாளை தொடங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs sl day night test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->