IND vs SA : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது. தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் இல்லை என்பதால் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது .

இந்திய அணி கடைசியாக 2017-18 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது .அதன் பிறகு இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அசத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற 26 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் டிராவில் முடிந்து உள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே தோல்வியை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தனக்கு சாதகமான மைதானத்தின் முதல் போட்டியை நடத்தி இந்தியாவுக்கு பலத்த அடி கொடுக்க முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. அடுத்த இடத்தில் புஜாரா களம் இறங்க வாய்ப்புள்ளது. நான்காவது இடத்தில் விராட் கோலி களமிறங்குவார். 5-வது பலத்த போட்டி நிலவுகிறது. ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி  ஆகியோர் யாரேனும் ஒருவர் ஐந்தாம் இடத்தில் களம் இறக்க வாய்ப்புள்ளது. இவர்களில் ரஹானேவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 ரன்களை எடுத்துள்ளார். ஆகையால் 5வது இடத்தில் ரஹானே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஆறாவது இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்குவர்.

இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள 5 பௌலர்களுடன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்தூல் தாகூர், ஜஸ்பரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக ஷர்தூல் தாகூர் சேர்ப்பதால் இந்திய அணிக்கு எட்டாவது இடம் வரை பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் என்பதால், ஷர்தூல் தாகூர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ind vs sa first test match predicted xi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->