அதிர்ச்சியில் இந்திய அணி ரசிகர்கள்., வெளியான அறிவிப்பு.! இனி நாளைக்கு தான்பா.! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 272 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. கே எல் ராகுலும், அஜிங்கிய ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். 

 

நேற்றைய ஆட்டத்தின் செய்தி சுருக்கம் பின்வருமாறு : 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் களமிறங்கி பேட்டிங்கை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் - மயங்க அகர்வால் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி, 83 ரன்களை சேர்த்துள்ளது.

உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், அவர் 123 பந்துகளில் 9 பவுண்டரி விளாசி 60 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நிதானமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 94 பந்துகளை சந்தித்து 35 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதே சமயத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே எல் ராகுல் 248 பந்துகளை சந்தித்து 122 ரன்களை எடுத்துள்ளார். இதில் 17 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 272 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. கே எல் ராகுலும், அஜிங்கிய ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND VS SA BOXING DAY TEST MATCH 2nd day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->