ஹர்திக், சூரியகுமார், இஷான் காயம்! நியூசிலாந்தை சமாளிக்குமா இந்தியா? பிளேயிங் 11ல் அதிரடி மாற்றம்!! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. தர்மசாலாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் பங்குபெறும் இந்திய அணையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் கடந்த போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இன்று நடைபெறும் போட்டியில் சூரியகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் இருவரில் ஒருவர் மிடில் ஆர்டரின் களமிறங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் நேற்று தீவிர வலை பயிற்சி ஈடுபட்டு கொண்டிருந்தபோது கையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடிதுடித்து போன சூரியகுமார் யாதவுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் தனது பயிற்சியை தொடராமல் பாதியிலேயே வெளியேறினார். 

அவருக்கு மிகப்பெரிய காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டாலும் அவர் இன்றைய போட்டியில் பங்கு ஏற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு மாற்று வீரராக கலந்திருக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் வலை பயிற்சி ஈடுபட்டிருந்த போது அவரை தேனீக்கள் சுற்றி வளைத்தது. 

அதில் ஒரு தேனீ இஷான் கிஷனின் கழுத்து பகுதியில் கொட்டியதால் வலியில் துடிதுடித்து போனா அவர் தனது பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார். ஏற்கனவே பாண்டியா காயம் காரணமாக இன்றைய போட்டியில் இடம்பெறாத நிலையில் அவர் இடத்தை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முக்கிய வீரர்களும் தற்போது காயமடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் இன்றைய இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பும் வகையில் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு அவருக்கு பதில் முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ind vs nz Suryakumar Ishan kishan injured


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->