டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி.? இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டி20 இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிடம் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

அதன்படி, 3வது டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  இன்று இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

தொடரை நிர்ணயிக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IND vs AUS 3rd T20 match today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->