இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.. தொடருமா இந்திய அணியின் ஆதிக்கம்? - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 17-21) காலை 9:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியில் இன்றைய போட்டியில் காயத்தில் இருந்து குணமடைந்த ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமாருக்கு பதிலாக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய வீரர் புஜாராவுக்கு இந்த போட்டி 100-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க போராடும் என்பதால் 2வது டெஸ் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடருக்கான அணி விவரம்

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கீ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், சுப்மன் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர்  , குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ்

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி(w), பாட் கம்மின்ஸ்(c), டோட் மர்பி, நாதன் லியான், ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட்  , மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் அகர், மேத்யூ குஹ்னெமன், லான்ஸ் மோரிஸ்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 2nd test match today starts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->