அனல்பறக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. இன்று முதல் டெஸ்ட் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

நியூசிலாந்து அணியுடனான தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் தொடங்க உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. அதன்படி முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் இந்த தொடர் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளும் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 43 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், 30 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. ஒரே ஒரு போட்டி முடிவில்லை.

டெஸ்ட் தொடருக்கான அணி விவரம்:

இந்திய அணி 11 வீரர்கள் :

ரோஹித் சர்மா(கே), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரீகர் பாரத்(வி.கீ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ்  , சூர்யகுமார் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா அணி 11 வீரர்கள் :

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி(w), பாட் கம்மின்ஸ்(c), நாதன் லியான், ஸ்காட் போலண்ட், டோட் மர்பி, மிட்செல் ஸ்வெப்சன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க் , மாட் ரென்ஷா, கேமரூன் கிரீன், லான்ஸ் மோரிஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 1st test match today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->