2027 ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை: இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியீடு — அக்டோபர் 10-ல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!
ICC World Cup 2027 Indias Schedule Announced Shubman Gill-Led Team to Face Pakistan on Oct 10
அடுத்த ஆண்டு (2027) அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. இத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை அக்டோபர் 7-ஆம் தேதி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
முக்கியப் போட்டிகளின் அட்டவணை:
ரசிகர்கள் உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி அக்டோபர் 10-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து:
அக்டோபர் 14: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக செஞ்சுரியனில் (ட்ஷ்வானே) மோதல்.
அக்டோபர் 17: தகுதிச்சுற்று போட்டி (Bloemfontein).
அக்டோபர் 24: ஜிம்பாப்வே அணிக்கு எதிராகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விக்டோரியா ஃபால்ஸ் மைதானத்தில் போட்டி.
இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கேப் டவுன் மற்றும் செஞ்சுரியனில் நடைபெறும் நிலையில், சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நவம்பர் 21-ஆம் தேதி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்:
உலகக் கோப்பைத் தொடருக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
English Summary
ICC World Cup 2027 Indias Schedule Announced Shubman Gill-Led Team to Face Pakistan on Oct 10