#WT20WC : மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், முதலில் நடைபெறும் லீக் சுற்று போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அதனைத் தொடர்ந்து முதல் அரையிறுதிப்போட்டி பிப்ரவரி 23ம் தேதியும், 2வது அரையிறுதி போட்டி பிப்ரவரி 24ம் தேதியும் நடைபெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில்   தென்னாப்பிரிக்கா - இலங்கை இலங்கை அணிகள் மோதுகின்றன. கேப் டவுன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை மறுநாள் (பிப்ரவரி 12ம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Womens T20 World Cup starts from today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->