ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. அதிரடியாக முதலிடம் பிடித்த இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. அதில், 3 ஒருநாள் போட்டிகளில் 3 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. இதில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 65 ரன்களை எடுத்தார். 

இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 17 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.  

இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதன் பிறகு இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC T20I rankings Team India No1 Place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->