இந்தியாவின் முதல் 'மைட்டி' ஆல்-ரவுண்டர்... வரலாறு படைத்த ஹர்திக் பாண்ட்யா! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் காட்டிலும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா படைத்த வரலாற்றுச் சாதனைதான் இப்போது கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்!

இந்தியாவின் முதல் 'மைட்டி' ஆல்-ரவுண்டர்
இந்தப் போட்டியில் 30 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 6000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்டுகள் என்ற இமாலய மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

உலகப் பட்டியலும் இந்திய நிலவரமும்:
சர்வதேச அளவில் இந்தச் சாதனையைச் செய்யும் 6-வது வீரர் ஹர்திக் ஆவார். இவருக்கு முன்னதாக இந்த எலைட் கிளப்பில் இருப்பவர்கள்:

கீரன் பொல்லார்ட்
ஆண்ட்ரே ரசல்
ஷகிப் அல் ஹசன்
முகமது நபி
டுவைன் பிராவோ

இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 200 விக்கெட்டுகளைக் கடந்திருந்தாலும், 6000 ரன்கள் என்ற இலக்கை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் 'பெஸ்ட்' டி20 ஆல்-ரவுண்டர் யார் என்ற விவாதத்திற்கு ஹர்திக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hardik Pandyas Historic Double First Indian in the 6000 200 Club


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->