அடி பட்டிருக்குனு தானே சொன்னாங்க.. இந்த ஆட்டம் ஆடுறாங்க.?! வைரலாகும் பிரபல இந்திய வீரர்களின் வீடியோ..! - Seithipunal
Seithipunal


ந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவர் உடற்பயிற்சி செய்யும்போது பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக் கொண்டிருந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான விளையாட்டின்போது மைதானத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் ரஞ்சித் கோப்பை தொடரில் விளையாடிய இஷாந்த் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டதால் அவரும் தற்போது ஓய்வில் இருக்கிறார். இதை தொடர்ந்து உடற்தகுதி தேர்வில் இஷாந்த் ஷர்மா தேறினால் மட்டுமே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி ஒன்றில் ஹர்டிக் பண்டியா, ஷர்மாவும் வருகின்ற போட்டிகளுக்காக பயிற்சி செய்து வருகின்றனர். அப்போது இவர்கள்  உடற்பயிற்சி செய்யும்போது பாலிவுட் பாடல் ஒன்றுக்கு இருவரும் ஜாலியாக நடனமாடிக் கொண்டு உள்ளனர். இந்த பதிவை இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இவங்களுக்கு காயம் தானே ஏற்பட்டிருந்தது? இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் என்று கேலி செய்து வருகின்றனர். மேலும், விரைவில் இவர்கள் விளையாட தயாராகி விட்டதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hardik pandya and ishant sharma enjoys while practice


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal