#IPL2023 : குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்.. அணி நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதில், நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், முதலில் பீல்டிங் செய்த போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் காலில் காயமடைந்தார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயாராக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில் கேன் வில்லியம்சனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது. இது குஜராத் டைட்டன்ஸ் அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans Kane Williamson ruled out of IPL 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->