கம்பீர் அந்த நன்றி மறந்து ஷ்ரேயாஸை கழற்றி விட்ருக்கக் கூடாது– கம்பீர் மீது சடகோபன் ரமேஷ் கடும் விமர்சனம்
Gambhir He shouldnot have forgotten that gratitude and dropped Shreyas Sadagopan Ramesh harshly criticizes Gambhir
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் துணைக் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் நீக்கப்பட்டிருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, கடந்த 2024 ஐபிஎல் தொடரில் கேப்டனாக கோப்பையை வென்றதோடு, 2025 சீசனில் பஞ்சாப்பை 11 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். அதுமட்டுமன்றி, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியிருந்தார். சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் 604 ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருந்தார். இத்தகைய நிலையில் அவருக்கு ஆசியக் கோப்பையில் கூட இடம் கிடைக்கவில்லை.
இது குறித்து முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்தார். அதில், “கௌதம் கம்பீர் தாம் விரும்பும் வீரர்களுக்கு ஆதரவு தருவார். ஆனால் பிடிக்காதவர்களை முழுமையாக புறக்கணித்து விடுவார். வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி பெறும் கலாச்சாரம் விராட் கோலி – ரவி சாஸ்திரி காலத்தில் துவங்கியது. தற்போது இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தது கம்பீரின் பெரிய சாதனை என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியே கம்பீரின் மிகப்பெரிய சாதனை. அதற்குக் காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் தான்” என்று விமர்சித்தார்.
மேலும் அவர், “ஜெய்ஸ்வாலை ரிசர்வ் பட்டியலில் வைத்திருப்பது சுமாரான முடிவு. ஆனால் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஸ்ரேயாஸ் அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தினார். அதே இடத்தில் தான் ஆசியக் கோப்பையும் நடைபெற உள்ளது. உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அவருக்கு வாய்ப்பு தர வேண்டியது அவசியம். பின்னர் அல்ல” என்றும் வலியுறுத்தினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியக் கோப்பை துவங்குவதற்குமே அணித் தேர்வு இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சையை தூண்டியுள்ளது.
English Summary
Gambhir He shouldnot have forgotten that gratitude and dropped Shreyas Sadagopan Ramesh harshly criticizes Gambhir