ஆன்மீக பயணம் மரணப் பயணமாகிய சம்பவம்...! - பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து, பலர் பலியான சோகம்...! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர், ஆன்மீகப் பயணமாக ஒரு தனியார் பேருந்தில் இன்று அதிகாலை சீதாராமராஜு மாவட்டத்தின் மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு செல்கின்றனர்.

மலைப் பகுதியில் வளைவுகளை கடந்து சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆழமான பள்ளத்தாக்குக்குள் புரண்டுவிழுந்தது.இதனால் நிகழ்ந்த பயங்கர விபத்தில், பேருந்தில் இருந்தவர்களில் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 15 பேர் கடுமையான காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த நிலையில், தகவல் கிடைத்த போலீசார் அவசர மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதே நேரத்தில், பேருந்து தவறி விழுந்ததற்கான காரணங்கள், டிரைவர் தவறு, பிரேக் கோளாறு அல்லது ரோடு நிலைமை ஆகியவற்றில் எது காரணமென போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

spiritual journey turned into death journey bus overturned valley many people killed


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->