#FIFAWorldCup2022 : இறுதிப்போட்டிக்கு முன்னேற்றப் போவது யார்? பிரான்ஸ் - மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் -மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

அதன்படி, நெதர்லாந்து, செனகல், அர்ஜென்டினா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா, பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியின் முடிவில், காலிறுதி போட்டிக்கு நெதர்லாந்து, குரோஷியா, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டிகள் முடிவில், அர்ஜென்டினா, குரோஷியா, பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

இதில், நேற்று இரவு 12:30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், லூக்கா மோட்ரிச்சின் குரோஷியா அணியும் மோதியது.

இதில், 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது. இதன்மூலம், ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் - மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் டிசம்பர் 18ம் தேதி இரவு 8.30 நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் மோதும். அதேபோல் தோற்கும் அணி டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் 3வது இடத்திற்கான போட்டியில் மோதும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIFA world cup 2022 Semifinal 2 France vs Morocco


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->