பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் ஐசிசி விருது.. இந்திய வீரர் ஜடேஜா பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துனரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில், பிப்ரவரி மாத சிறந்த வீரர்களுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரோக், இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின்  மோட்டீ ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பரிந்துரை பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வோர்டே, இங்கிலாந்தின்  நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஆஸ்திரேலிய அணியின் ஆஷ் கார்ட்னர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்களிலிருந்து தலா ஒருவர் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

February month ICC awards nominees


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->