உலகக்கோப்பை : ஒரே நாளில் காயத்தால் வெளியேறிய வீரர்கள்! பயிற்சியாளரை வீரராக களமிறக்கிய பரிதாபம்!   - Seithipunal
Seithipunal


12 ஆவது உலக கோப்பை போட்டிகள் ஆனது 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள உலகின் முதல் 10 கிரிக்கெட் அணிகள் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராகும் விதமாக தற்போது அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராகவும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா எதிராகவும் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது யாருமே எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தது அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொடர் ஆரம்பிக்கும் பொழுதே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் காயமடைந்த நிலையில் முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அணியை ஜோஸ் பட்லர் வழிநடத்தினார். 

அந்த போட்டியில் விளையாடாமல் அணியின் முக்கிய வீரர் ஜோ ரூட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. தோள்பட்டை காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் அடில் ரசித் ஓய்வில் இருந்தார். இதன் பின்னர் 12 பேர் கொண்ட அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஏற்கனவே மூன்று வீரர்கள் விளையாடாத நிலையில் 12 ஆவது வீரராக சோப்ரா ஆச்சர் அணியில் இருந்தார். 

இந்த போட்டியின் போது பந்து வீசிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தன்னுடைய நான்காவது ஓவரில் கணுக்கால் காயம் அடைந்து வெளியேறினார். இது முதலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அவருக்கு பதிலாக களமிறங்கிய சோப்ரா ஆச்சர் பீல்டிங் செய்யும் போது விரலில் காயம் அடைந்தார். இதனையடுத்து அணியில் 10 பேர் மட்டுமே இருந்த நிலையில் பீல்டிங் செய்ய  ஒருவர்  தேவை என்பதால் ஜோ ரூட்டை களமிறங்கி பீல்டிங் செய்ய வைத்தார்கள்.

அவர் களத்திற்கு திரும்பிய நிலையில் டாவ்சன் காயமடைய மேலும் ஒரு வீரர் தேவைப்பட்ட நிலையில் அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் கால்லிங்வுட் மார்க் வுட்டின் சீருடைகளை அணிந்து கொண்டு ஒரு வீரராக களமிறங்கி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். 

42 வயதான பால் கால்லிங்வுட் இங்கிலாந்து அணிக்கு 20  ஓவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் ஆவார். அவர் 42 வயதிலும் பயிற்சியாளராக பணியாற்றும் நிலையில் ஒரு வீரராக களத்தில் நின்று பீல்டிங் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் நடைபெறுவதால் கைப்பற்ற அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என கணிப்புகளும் ஆருடங்களும் தெரிவித்து வரும் நிலையில், அந்த அணிக்கு காயம் பெருத்த பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை மோர்கன், ரஷீத், சோப்ரா ஆச்சர், மார்க் வுட், டாவ்சன் என 5 வீரர்கள் காயம் அடைந்து இருப்பது அந்த அணியை நிலைகுலைய செய்துள்ளது என்று கூற வேண்டும். இதில் சோப்ரா ஆச்சரின் காயம் சிறிதளவு இருப்பதால் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என  தெரிகிறது. மற்றவர்களின் உடற்தகுதி குறித்து சோதனைகள் நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England assistant coach played as player in warm up matches


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->