#INDvsPAK | பாகிஸ்தானை கதறவிட்ட தமிழன்! நோ  மட்டும்  இல்லனா, சாய் சுதர்சன் கதி?!  - Seithipunal
Seithipunal


23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 48 ஓவர்களில் அணைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன் எடுத்து.

அந்த அணியில் அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை, இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன்  5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி, 

36.4 ஓவர்களில், 210 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததது. ஆட்ட நாயகனான தமிழகத்தை சாய் சுதர்சன் 104 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்களும் அடங்கும். 

ஆட்டத்தின் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய சாய் சுதர்சன், 27.3 ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவர் அவுட் என்று அறிவித்த உடன், வாய்ப்பே இல்லை, நான் அவுட் இல்லை என்று, களத்திலேயே சாய் சுதர்சன் நடுவரை நோக்கி சமிச்சை செய்தார்.

பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். பின்னர் ரீவிவ் மூலம் 'நோ பால்' ஆனதால் சாய் சுதர்சன் மீண்டு, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.

மேலும், ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு, தனது செஞ்சுரியையும் நிறைவு செய்தார் நம்ம தமிழ்நாட்டு சிங்கம் சாய் சுதர்சன்.

லீக் சுற்று முடிவில் குரூப் 'பி' பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு சென்றுள்ளது. நேபாளம், ஐக்கிய அரபு அமீரக அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப்  'ஏ' பிரிவில் இலங்கை, வங்காளதேசம் முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தான், ஓமன் அணிகள் வெளியேறின.

அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணியும், இந்தியா-வங்காளதேச அணியும் மோதுகின்றன
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emerging Asia Cup 2023 India vs Pakistan Highlight Sai Sudharsan 100


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->