தங்கம் வென்ற 'தமிழகத்தின் தங்க மகள்' இளவேனில் வாலறிவன்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் முதலிடம் பிடித்து சாதனை..! - Seithipunal
Seithipunal


16-வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள்  கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், நடந்து வருகின்றன.  இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் அபாரமாக செயல்பட்டு, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.

இப்போட்டியில், சீனாவின் ஸின்லு பெங், 253 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கொரியாவின் இயுன்ஜி க்வான், 231.2 புள்ளிகள் பெற்று 03-வது இடத்தை பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ், 208.9 புள்ளிகள் பெற்று 04-வது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக, சீனியர் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா, ஆடவர் ஸ்கீட் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தவிர, இரு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elavenil Valarivan has won gold by finishing first in the Asian Shooting Championship


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->