தோற்றாலும் தோனி தோனி தான்! வெளியான புதிய அணிக்கும் தோனியே கேப்டன்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2019 சீசன் கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான பைனல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்சை 1 ரன்னில் தோற்கடித்து 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

ஒவ்வொரு வருடமும் வீரர்களின் செயல்பாட்டினை பொறுத்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், வீரர்களின் ஆட்டத்தினை ஆராய்ந்து அவர்களின் கனவு அணியை வெளியிடுவார்கள். போட்டிகளின் அடிப்படையில் இந்த வருடத்திற்கான கனவு அணியினை பிரபல கிரிக்கெட் இணையதளம் கிரீக் இன்போ வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கும்ப்ளே, சேவாக் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் இணையதளம் கிரீக் இன்போ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, போன்றோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. 

கிரீக் இன்போவின் கனவு அணியில் ஹைதராபாத் அணி சார்பில் வார்னர், பஞ்சாப் அணி சார்பில் ராகுல், ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயாஸ் கோபால், கொல்கத்தா அணி சார்பில் அந்ரே ரஸல், மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, டெல்லி அணி சார்பில் ஷிகர் தவான், ரிஷப் பந்த், ரபாடா, சென்னை அணி தரப்பில் இம்ரான் தாஹிர் மற்றும் கேப்டனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். பெங்களூர் அணி தரப்பில் யாருமே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரீக் இன்போவின் 11 பேர் கொண்ட கனவு அணி : 1. ஷிகர்  தவான், 2. டேவிட் வார்னர், 3. கேஎல் ராகுல், 4. எம் எஸ் தோனி ( கேப்டன் ), 5. ரிஷப் பந்த், 6. அந்ரே ரஸல், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஷ்ரேயாஸ் கோபால், 9. தாஹிர் 10. ரபாடா, 11. பும்ரா

அணியின் கேப்டனாக தோனியினை தேர்ந்தெடுத்துள்ளார்கள். கும்ப்ளே அணியில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கவில்லை அவருக்கு பதிலாக ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளார். 

சேவாக் தேர்ந்தெடுத்த அணியில் பெயர்ஸ்டோ, சாஹர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை அவர்களுக்கு பதிலாக தோனி, தாஹிர் இடம்பிடித்துள்ளனர். 

சென்னை அணியின் ரசிகர்களை நெகிழவைத்த அதிர்ச்சி சம்பவம்.!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni is captain of cricinfo dream XI in IPL


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal