சிஎஸ்கே-விடமிருந்து கோப்பையை தட்டிப்பறித்த இந்திய வீரர் திடீர் ஓய்வு!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் கோப்பையை வெல்ல காரணமான இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மனோஜ் திவாரி இன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 287 ரன்களைகுவித்துள்ள மனோஜ் திவாரி, கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் சதம் ஒன்றையும் விலகியுள்ளார்.

3 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ள மனோஜ் திவாரி, 98 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 1695 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்துள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டை பொருத்தவரை 9 ஆயிரத்து 908 எண்களை குவித்துள்ள மனோஜ் திவாரி 29 சதங்களையும் விலகியுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஒதுங்கிய மனோஜ் திவாரி, மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இணைந்து, தேர்தலில் வெற்றி பெற்று, அம்மாநில அமைச்சரவையிலும் இடம்பெற்று இருந்தார்.

கடந்த 2022 -23 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் மேற்கு வங்க அணிக்காக விளையாடிய மனோஜ் திவாரி, அந்த அணியை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்றார். அதுவே அவர் கடைசியாக ஆடிய தொடராகும்.

ஆக்ரோஷமான ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்ற மனோஜ் திவாரி, இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்த அவரின் அறிவிப்பில், "கிரிக்கெட்டில் இருந்து இப்போது நான் விடைபெறுகிறேன். எனக்கு அனைத்தையும் கொடுத்தது இந்த கிரிக்கெட் தான். 

எனது வாழ்வின் கடினமான சூழலில் இருந்தபோது, நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத அனைத்தையும் இந்த கிரிக்கெட் உலகம் தான் எனக்கு கொடுத்தது.

நான் எப்போதும் கடவுளுக்கும், கிரிக்கெட்டுக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இந்த பயணம் முழுவதும் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்தார்" என்று மனோஜ் திவாரி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மனோஜ் திவாரியின் கிரிக்கெட் ஆட்டங்களில் மறக்க முடியாத தொடர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் தான்.

இந்த ஐபிஎல் தொடரின் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிபெற 9 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அப்போது 7 வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மனோஜ் திவாரி, அந்த ஓவரின் 3 மற்றும் 4 வைத்து பந்துகளில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.

சென்னை அணியின் வெற்றியை பறித்த மனோஜ் திவாரியின் அந்த இரு பவுண்டரிகளும், சென்னை அணி ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டுத்து என்று சொன்னால் மிகையாகாது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricketer manoj tiwari kkr vs csk loss 2012 Retirement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->