கிரிக்கெட் GOD சச்சின் – பி.சி.சி.ஐ. தலைவரா...? உண்மை என்ன ...?
Cricket GOD Sachin BCCI President What truth
கடந்த 2 ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக பணியாற்றி வந்த 'ரோஜர் பின்னி', அண்மையில் 70 வயது நிறைவடைந்ததால் விதிகளின்படி பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து துணைத் தலைவர் 'ராஜீவ் சுக்லா' தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே, புதிய தலைவரை தேர்வு செய்வதில் பி.சி.சி.ஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில்,இந்திய கிரிக்கெட் லெஜண்ட் 'சச்சின் தெண்டுல்கர்' புதிய தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அண்மையில் இங்கிலாந்தில் நடந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது இதுகுறித்து சச்சினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவர் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதில் சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Cricket GOD Sachin BCCI President What truth