#BigBreaking || இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் - மாபெரும் சாதனையை படைத்து வரலாற்றில் இடம்பெற்ற இந்திய சிங்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்க பதக்கத்தினை வென்று கொடுத்துள்ளார் ஜெர்மி லால்ரின்னுங்கா.

பளு தூக்கும் போட்டியில் 67 கிலோ ஸ்நாட்ச் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி லால்ரின்னுங்கா 140 கிலோ தூக்கி புதிய கேம்ஸ் சாதனை படைத்தார்.

கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ தூக்கி அசத்தல், காயம் காரணமாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வருகிறார். 

காயம் காரணமாக அவர் ஏற்கனவே தூக்கிய அளவை விட குறைவாகவே 154 கிலோவை தூக்க ஆரம்பித்தார். பின்னர் 160 கிலோவை தூக்கும் போதே காயத்தால் அவதிப்பட்டாலும், வெற்றிகரமாக முடித்தார். 

மூன்றாவது முயற்சியில் 165 கிலோவை தூக்கும் போது, நிலைகுலைந்து கீழே விழுந்தார். மொத்தமாக அவர் 300 கிலோ தூக்கி காமன்வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கத்தினை கைப்பற்றியிருக்கிறார்.

இதன் மூலம் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் உடன் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.  

முன்னதாக இந்தியா பெற்ற பதக்கங்கள் விவரம் : 

* பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி, 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் ஆடவா் 55 கிலோ பிரிவில் சங்கட் சா்காா் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி மொத்தம் 269 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றாா். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commonwealth 2022 second gold medal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->