பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்ற தமிழ்நாடு பாரா பேட்மிண்டன் வீரர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தின் பாரா பேட்மிண்டன் வீரர்கள் இந்தியாவுக்காக 06 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று மீண்டும் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். பாரா நட்சத்திரங்களான சிவராஜன், சாருமதி, சுதர்சன், ருத்திக், ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் இந்த பதக்கங்களை வென்றுள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

'ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க வேட்டையை நிகழ்த்திக் காட்டி, பதக்கங்களைக் குவித்துள்ள நம் தமிழ்நாட்டு பாரா பேட்மிண்டன் வீரர்களின் அபாரச் சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்! மேலும் மேலும் நீங்கள் பெற்று வரும் வெற்றிகளால், விளையாட்டுத் துறையில் உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்து வருவது உறுதியாகி வருகிறது.' என கூறியுள்ளார்.

முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

'ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற #Badminton_International_Championship போட்டியில், தமிழகத்தின் பாரா பேட்மிண்டன் வீரர்கள் இந்தியாவுக்காக 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளனர்.

எங்கள் பாரா நட்சத்திரங்கள் சிவராஜன், சாருமதி, சுதர்சன், ருத்திக், ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். SDAT ஆல் ஆதரிக்கப்பட்ட அவர்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த குறிப்பிடத்தக்க வெற்றியின் மூலம் அவர்கள் நமது மாநிலத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அவர்களின் வெற்றி இன்னும் பல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஆர்வத்துடன் விளையாட்டுகளைத் தொடர ஊக்குவிக்கும். அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin congratulates Tamil Nadu para badminton players who won gold in the Badminton Championship


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->