சென்னை பந்துவீச்சு தேர்வு! அணியில் முக்கிய மாற்றம்! போட்டியை காண சென்ற அரசியல் தலைவர்!  - Seithipunal
Seithipunal


12வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இன்றைய 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணியுடனான கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இன்று கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹைதராபாத் அணி, 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும் 4ல் தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த காரணங்களுக்காக அவர் தனது சொந்த நாடான நியூசிலாந்து சென்றுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக புவனேஷ் குமார் அணியை வழிநடத்த உள்ளார்.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷரதுல் தாக்குர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் இணைக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் அணியில் வில்லியம்சன் இடத்தினை சாகிப் அல் ஹஸனும், நதீம் இடத்தினை மனிஷ் பாண்டேவும் பிடித்துள்ளார்கள். 

இந்த போட்டியை காண திமுக தலைவர், பொருளாளர் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இரண்டு அணிகளில் ஒரு அணி திமுக குடும்ப அணி என்பது குறிப்பிடத்தக்கது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai won the toss and elected field against SRH


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->