இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சி மாற்றம்.? பிசிசிஐ பொருளாளர் வெளியிட்ட தகவல்.! 
                                    
                                    
                                   captaincy no change
 
                                 
                               
                                
                                      
                                            இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக உள்ளார். கேப்டன் விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

டெஸ்ட் போட்டிகளில்  இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை குவித்து வருகிறது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க சிரமப்படுகிறார். கோலி தனது  பேட்டிங்கில் தடுமாறுவது தெளிவாக தெரிகிறது. 
மேலும், கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை பெற்றாலும், ஐசிசி தொடரை ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது குறையாகவே உள்ளது. இதனிடையே,  ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக தொடர்வார் என்றும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை கேப்டன் கோலி விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், கேப்டன்சி மாற்றத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கு விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.