சிஎஸ்கே ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

2 நாட்கள் முன்பு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. 

காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பிராவோ விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரபல செய்தி நிறுவனத்திற்கு சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது, பிராவோ இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் திரும்புகிறார். இன்னும் ஒரு நாளில் அவர் சொந்த நாட்டிற்கு சென்று விடுவார். 

மேலும், சிஎஸ்கே அணிக்கு ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் முக்கியமான வீரர்கள். இருவரையும் சிஎஸ்கே மிஸ் செய்கிறது. ஆனால், ஒருவரின் தனிப்பட்ட முடிவு நாம் மதிக்க வேண்டும். அதில், மூத்த வீரர். இளம் வீரர் என்ற பாகுபாடு காட்டக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bravo will not play in ipl 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->