இறுதிப் போட்டிக்கு நுழைந்த பெங்களூரு அணி: ஆர்சிபி பந்துவீச்சில் பொட்டலமாகி பஞ்சாப் பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


18-வது ஐ.பி.எல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பெங்களூரு அணி  இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றுகள் நேற்று முன்தினம் முடிந்த நிலையில், பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மற்றும் மும்பை அணிகள் முறையே 4 இடங்களை பிடித்து இறுதிபோட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற இறுதிபோட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணியும், 02-வது இடம் பெற்ற பெங்களூரு அணியும் மோதியது.

ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக பிரியான்ஷ் ஆர்யா (7) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (18) இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (2)  அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்.10 ஓவர்கள் முடிவில் பஞ்சாபி அணி 07 விக்கெட் இழப்பிற்கு 71 ரன் எடுத்தது.

அடுத்த வந்த மார்கஸ் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். ஷாஷாங் சிங் 03 ரன்களில் வெளியேறினார். முஷீர் கான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ஹர்பிரீத் ப்ரார் 04 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதியில் ஒமர்ஷாய் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி, 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களுக்குள்  சுருண்டது.

பெங்களூரு அணி சார்பில்  ஹே சல்வுட், சுயாஷ் சர்மா சிறப்பாக பந்துவீசி தலா 03 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யாஷ் தயாள் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 102 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, பில் சால்ட், விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடினர். இதில் விராட் கோலி, 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தபோது ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மயங்க் அகர்வால் 19 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் அடித்து, 03 சிக்ஸர்கள் மற்றும் 06 பவுண்டரிகளுடன் 56 எடுத்தார்.

அவருடன் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் இணைந்து 15 ரன்கள் சேர்க்க பெங்களூரு அணி, 10 ஓவரில் 02 விக்கெட் இழப்பிற்கு 106 ரன் எடுத்து 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜூன் 3 அன்று நடைபெறும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது. இதன் மூலம் 04வது முறையாக பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bengaluru team enters the final


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->